கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெய்வேலியில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாய நிலங்களை கைப்பற்றி அதில் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக பாமக சார்பில் என்.எல்.சி. நிறுவம் முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை முதலே என்.எல்.சி. நிறுவனம் அருகே அக்கட்சி தொண்டர்கள் திரளத் தொடங்கினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுடன் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட முயன்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். ஆனால் அன்புமணி ஏற்றப்பட்ட வாகனத்தை சூழ்ந்து கொண்ட அக்கட்சி தொண்டர்கள் வாகனம் அங்கிருந்து செல்லாத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணா நதியா? முதலை பண்ணையா? மனிதர்களை பார்த்ததும் கூட்டம் கூட்டமாக ஆற்றுக்குள் பாய்ந்த முதலைகள்
ஒரு கட்டத்தில் காவல் துறையினர் மீது பாமகவினர் கல்வீச்சில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைந்துபோகச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் கலைந்து போகாததால் காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து வடமாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் இருந்து நெய்வேலி மார்க்கமாக திருச்சி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
திருப்பத்தூரில் பண்ணை குட்டையில் மூழ்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
மாவட்டத்திற்குள்ளும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி சென்ற மாணவர்கள், வேலைக்கு சென்ற பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.