தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி இன்று தனது உரையை வாசிக்க தொடங்கிய 3 நிமிடங்களில் தனது உரையை முடித்துக்கொண்டார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் இன்று உரைய பேச சட்டப்பேரவைக்கு வந்தார். அவருக்கு நுழைவு வாயிலில் சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதன் தொடர்ந்து சிவப்பு கம்பள மரியாதையுடன் உரை நிகழ்த்த வரும் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபை மார்ஷல் முன் செல்ல, சபாநாயகர், சட்டசபை செயலர் ஆகியோரை ஆளுநர் ஆர்.என். ரவி பின் தொடர்ந்தார்.
சபையில் சபாநாயகர் இருக்கைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.இதனை தொடர்ந்து ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்க தொடங்கினார். அப்போது தமிழில் முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர், சட்டசபை அலுவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
உரையை புறக்கணித்த ஆளுநர் ரவி
தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய ஆளுநர் ரவி தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் தொடங்கும் போது வாசிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டை கூறினார். தேசிய கீதம் தொடங்கும் போதும் முடியும் போதும் படிக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்க்கப்படவில்லை என தெரிவித்தவர், அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்கவிரும்பவில்லையென தெரிவி்த்தார். இதனையடுத்து வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். இதன் காரணமாக சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ரவியின் உரையை தமிழில் மொழிபெயர்த்தார்.
இதையும் படியுங்கள்
“அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் சிறை தான்” செந்தில் பாலாஜியை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் பேச்சு