ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் 20 நாளில் திடீர் மரணம்.. நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Feb 12, 2024, 8:27 AM IST

சென்னை விநாயகபுரம் வேல்முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அனந்தராமன். இவரது மகள் இந்துஜா (27). மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பெரம்பூர் ஜமாலியா எஸ்பிஐ காலனி 2வது தெருவை சேர்ந்த ஹரிகரன் (30) என்பவரை காதலித்து வந்துள்ளார்.


சென்னையில் திருமணமான 20 நாட்களில் புதுப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

சென்னை விநாயகபுரம் வேல்முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அனந்தராமன். இவரது மகள் இந்துஜா (27). மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பெரம்பூர் ஜமாலியா எஸ்பிஐ காலனி 2வது தெருவை சேர்ந்த ஹரிகரன் (30) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இந்துஜா கடந்த ஜனவரி 21ம் தேதி திருமணம் நடந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: உஷார் மக்களே.! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.!

நேற்று முன்தினம் மதியம் கணவர் வீட்டில் இந்துஜா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் பதறியடித்துக்கொண்டு இந்துஜாவை  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்துஜா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லையா.? போராட்டத்திற்கு காரணம் என்ன.? போக்குவரத்து கழகம் விளக்கம்

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்துஜாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்துஜாவின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி 20 நாட்களே ஆன நாட்களேயாவதால் வழக்கை கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

click me!