உரையை வாசிக்க மறுத்து வெளியேறிய ஆளுநர் ரவி.! சட்டப்பேரவையில் திமுக அரசுக்கு ஷாக்

By Ajmal Khan  |  First Published Jan 6, 2025, 9:37 AM IST

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆளுநர் உரை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த ஆண்டு உரை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.


தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர்

வருடத்தின் முதலாவது தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் போது  ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது.  அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் ரவி தமிழக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த உரையை வாசிக்க மறுத்தார். அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார். மேலும் ஆளுநரின் உரைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இந்த நிலையில்  இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் உரை நிகழ்த்த  ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்திருந்தார். இதனையேற்று இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டார்.  காலை 9.20 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

உரையை வாசிக்க மறுத்த ஆளுநர்

இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டசபை முதன்மை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டசபை கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர்.  காலை 9.30 மணிக்கு சட்ட பேரவை கூட்டம் தொடங்கியது. முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர்,  தனது உரையை வாசிக்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பான காட்சியளிக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதம் இயக்கப்பட வேண்டும் என ஆளுநர் ரவி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் அந்த சார்.?

அண்ணா பலைகலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் யார் அந்த SIR என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டையோடு கூட்டத்தில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

click me!