பொங்கலுக்கு தொடர் விடுமுறை; தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்; எந்தெந்த பகுதிகள்?

By Rayar r  |  First Published Jan 5, 2025, 6:50 PM IST

பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்படும் நிலையில், தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம். 


பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை

தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாட ஏதுவாக கிட்டத்தட்ட 9 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு புறப்பட தயாராக உள்ளனர்.

Tap to resize

Latest Videos

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் மதுரை, நெல்லை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 

தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரயில் 

இந்நிலையில், தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கலுக்கு முந்தைய நாளான 13ம் தேதி தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06093) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது வரும் 13ம் தேதி இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். 

இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும்.

எத்தனை பெட்டிகள் இருக்கும்?

மறுமார்க்கமாக கன்னியாகுமரி தாம்பரம் சிறப்பு ரயில் (வ.எண்: 06094) 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலும் மேற்கண்ட ஊர்கள் வழியாகச் செல்லும். 

இந்த சிறப்பு ரயிலில் சாதாரண படுக்கை வசதி கொண்ட 10 பெட்டிகள், 2 இரண்டடுக்கு ஏசி பெட்டிகள், 4 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், 2 ஏசி எக்கனாமிக்கல் பெட்டிகள் மற்றும் 1 பொதுப்பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்.

தென் மாவட்ட மக்களுக்கு பயன் 

13ம் தேதி இரவு வேலையை முடித்து விட்டு கடலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கும்,  விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கும் இந்த ரயில் வசதியாக இருக்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது. 
 

click me!