மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு

By SG Balan  |  First Published Jan 5, 2025, 7:35 PM IST

P Shanmugam, CPM: விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பெ. சண்முகம் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவு கண்டது. இந்த 24வது மாநில மாநாடு ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டின் நிறைவு விழாவின்போது கட்சியின் புதிய மாநிலச் செயலராக பெ . சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.

Tap to resize

Latest Videos

முன்னதாக, புதிய மாநிலக்குழு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழுவினரும், அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர், மாநிலக் குழுவினர் சேர்ந்து ஆலோசித்து புதிய மாநிலச் செயலராக பெ. சண்முகத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

தமிழக அரசு 9 நாட்கள் முடங்குகிறதா? அரசு ஊழியர்களுக்கு ஜாலிதான்!!

பெ. சண்முகம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருப்பவர். முன்னதாக, மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அமைப்பு மற்றும் விவசாய சங்க மாநிலச் செயலாளர் பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். வாச்சாத்தி வன்கொடுமை தொடர்பான வழக்கை இறுதிவரை முன்னின்று நடத்தினார்.

இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், கே.ஏ. பேபி, ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, டி. ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர். முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

18 வயசு ஆகலயா? சோஷியல் மீடியா பார்க்க பெற்றோர் அனுமதி வாங்கணும்!

click me!