
தமிழகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த ஓராண்டு காலமாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு நியமித்தது. சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பன்வாரிலால் புரோகித் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பன்வாரிலால் புரோகித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிண்டி, ராஜ்பவனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்றார். தமிழகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.