
கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். நடராஜனைக் காண பரோலில் வெளிவந்துள்ள சசிகலா காலை 11 மணி அளவில் நடராஜனைக் காண மருத்துவமனைக்கு செல்கிறார்.
இதற்கிடையே நடராஜனின் உடல்நிலை குறித்து குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் அவரது உடல்நிலை தேறிவருகிறது. எனினும் இன்னும் சில நாட்கள் மிக முக்கியமானவை. அவரை மிகக் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நடராஜனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குளோபல் மருத்துவமனைக்கு சென்று நடராஜனை சசிகலா சந்திக்கிறார்.