மாமல்லபுரத்தைக் கலக்கிய ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்... ஆய்வுக்கு கிளம்பிட்டார்!

Asianet News Tamil  
Published : Nov 27, 2017, 07:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
மாமல்லபுரத்தைக் கலக்கிய ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்... ஆய்வுக்கு கிளம்பிட்டார்!

சுருக்கம்

governor banwarilal purohit examined mamallapuram area and temple

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

தமிழகத்துக்கு முழு நேர ஆளுநராக  பன்வாரி லால் புரோஹித் நியமிக்கப் பட்ட பின்னர், அவர் திடீரென ஆய்வுப் பணிகளுக்காக என்று கூறி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று வருகிறார். 

முன்னர் கோயமுத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் நிலவரங்களைக் கேட்டறிந்தார். இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொண்டார்.

மாமல்லபுரம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் இடம். இங்கே உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகின்றனர். எனவே, இந்தப் பகுதியில், 

சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் பற்றி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும், மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் நிலைமை குறித்தும் ஆளுநர் கேட்டறிந்தார்.

முன்னதாக, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்தலசயனப் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். கோயிலுக்கு வந்த அவருக்கு கோயிலின் சார்பில் மரியாதைகள் வழங்கப் பட்டன. அங்கே சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தார் பன்வாரி லால் புரோஹித். 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 31 December 2025: ஜனவரி 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. உங்கள் பணம், சம்பளம், யுபிஐ எல்லாம் மாறும்!
ஆண்டின் கடைசி நாளில் இப்படியா..! தமிழகத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை தெரியுமா?