
அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையாக செயல்பட்டால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளியை நாடுகிறார்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் நவோதாயா பள்ளி அமைக்க கோரி குமரி மகாசபா செயலர் ஜெயக்குமார் தாமஸ் பொதுநல மனு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.
அதில், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை, மத்திய அரசு நடத்துவதாகவும், ஆனால் தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கபட்டிருந்தது.
தமிழகத்தில், மாவட்டந்தோறும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடபட்டிருந்தது.
இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு தமிழகத்தில் போதிய அளவிற்கு பள்ளிகள் இருப்பதால் நவோதயா பள்ளி தேவை இலை என தெரிவித்தது.
இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையாக செயல்பட்டால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளியை நாடுகிறார்கள் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.