
விருதுநகர்
விருதுநகரில், கால் டாக்ஸிகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ராஜபாளையம் டாக்ஸி வேன் உரிமையாளர் ஓட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் டாக்ஸி வேன் உரிமையாளர் ஓட்டுநர் சங்கத்தினர் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமைத் தாங்கினார். சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் விளக்கவுரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "கால் டாக்ஸிகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்,
ஓட்டுனரின் வாழ்வாதாரமான லைசென்சை அற்ப காரணங்களுக்காக பறிமுதல் செய்யக் கூடாது,
மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்,
கேரளாவைப்போல அனைத்து மருத்துவமனைகளிலும் 48 மணி நேர விபத்து முதலுதவி சிகிச்சை இலவசமாக வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சி.ஐ.டி.யூ. கன்வீனர் சுப்பிரமணியம், சங்க தலைவர் விஜயகுமார், துணைத்தலைவர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.