அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. பயணிகளின் நிலை என்ன? பரபரப்பு தகவல்!

By vinoth kumar  |  First Published Jul 5, 2024, 11:18 AM IST

திருவண்ணாமலையில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி அரசு பேருந்து வந்துக்கொண்டிருந்தது. 


சிங்கப்பெருமாள் கோயில் அருகே அரசுப் பேருந்து - கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

திருவண்ணாமலையில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி அரசு பேருந்து வந்துக்கொண்டிருந்தது. பேருந்து செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் அருகே வந்த போது சாலையை கடக்க முயன்ற கண்டெய்னர் லாரியின் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்து நடத்துனர், ஓட்டுநர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: School Students: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்..!

 உடனே  அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக அப்பகுதியில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

click me!