Alexis Sudhakar : பாஜக மாநில செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது.. யார் இந்த அலெக்ஸிஸ் சுதாகர்? பரபரப்பு தகவல்

By Ajmal Khan  |  First Published Jul 5, 2024, 10:53 AM IST

போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில்  பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

தமிழக பாஜகவில் ரவுடிகள், கொலை குற்றவாளிகள் அதிகளவு சேர்க்கப்படுவதாக தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில், பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரபல ரவுடி சத்யா இவரின்  ஒரிஜினல் பெயர் சத்தியராஜ். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிதான் அவனது சொந்த ஊர். இவர் மேல் பல கொலை மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் உள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் கோவையில் ஒரு வழக்கில் சத்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில், மாமல்லபுரம் அருகே பிரபல கூலிப்படை கும்பல் தலைவனான சீர்காழி சத்யாவை கடந்த ஜூன் 28-ம் தேதி அன்று போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். 

மகள் தாலி அறுத்தாலும் பரவாயில்லை! மருமகனை ஆணவக்கொலை செய்ய கூலிப்படை ஏவிய மாமனார்! 3 பேர் மீது குண்டாஸ்!

பாஜக நிர்வாகி பிறந்தநாள கொண்டாட்டம்

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர்  அலெக்ஸ்ஸிஸ்  சுதாகர்,  பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மாமல்லபுரம் அருகே நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது தான் ரவுடி சதியா  தப்பியோட முயன்றதால், அவரை போலீஸார் சுட்டுப்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடமிருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட ரவுடி சத்யா நீதிமன்ற உத்தரவையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

பாஜக மாநில செயலாளர் மீது குண்டாஸ்

இந்த வழக்கில் கள்ளத்துப்பாக்கி சத்யாவுக்கு வழங்கியதாக, வழக்கறிஞர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரி சுதாகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை வருகிற 8 ஆம் தேதி வரவுள்ளது. இந்தநிலையில் அலெக்சிஸ் சுதாகர் மீது ஏற்கனவே  3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனையடுத்து  செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் பரிந்துரையையடுத்து  அலெக்சிஸ் சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

Nithyananda : கைலாசா நாட்டிற்கு போறீங்களா.? அழைப்பு விடுத்த நித்யானந்தா.!! எங்கே இருக்குதுனு தெரியுமா.?

click me!