டெல்லிக்கு எஸ்கேப் ஆகும் ஆளுநர் ரவி! பொன்முடியின் பதவிப் பிரமாணம் எப்போ?

By SG Balan  |  First Published Mar 13, 2024, 11:47 PM IST

அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும். ஆனால் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதைத் தாமதப்படுத்தும் நோக்கில் தான் ஆளுநர் சென்னைக்கு வந்த வேகத்தில் மீண்டும் டெல்லிக்குத் திரும்புகிறார் என சந்தேகம் எழுந்துள்ளது.


ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை காலை டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் எம்எல்ஏ ஆகியிருக்கும் பொன்முடி அமைச்சராகப் பதவியேற்பது தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை (வியாழக்கிழமை) காலை 6.50 மணிக்கு விமானம் மூலம் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிறகு மார்ச் 16ஆம் தேதி தான் மீண்டும் தமிழகம் திரும்புகிறார். ஆளுநரின் இந்தத் திடீர் டெல்லி பயணம் எதற்காக என்ற விவரம் ஏதும் வெளியாகவில்லை.

Latest Videos

பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். இச்சூழலில் ஆளுநர் ரவி நாளை அவசரமாக டெல்லி பயணம் செய்ய இருக்கிறார். ஏற்கெனவே டெல்லி சென்றிருந்த ஆளுநர் இன்று மாலையில்தான் சென்னை வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்! 5,000 பேருக்கு வேலை கிடைக்கும்!

ஆனால், முதல்வரின் கடிதம் வந்தவுடன் அவர் மீண்டும் டெல்லி செல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கவர்னரின் இந்தப் பயணத்தால் நாளை நடைபெறுவதாக இருந்த பொன்முடியின் பதவியேற்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும். ஆனால் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதைத் தாமதப்படுத்தும் நோக்கில் தான் ஆளுநர் சென்னைக்கு வந்த வேகத்தில் மீண்டும் டெல்லிக்குத் திரும்புகிறார் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆளுநர் நேரம் கொடுத்தால் புதன்கிழமை இரவே பதவியேற்பு நிகழ்வை நடத்திவிடலாம் என்று தமிழக அரசு தயாராகி இருக்கிறது. பொதுப்பணித்துறை அதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக ஆளுநர் டெல்லிக்குக் கம்பி நீட்டிவிட்டார் என திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வந்தே பாரத் ரயிலில் பாட்டு பாடிய 12 பெண்கள்! தெற்கு ரயில்வேயை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

click me!