தோல்வி பயத்தால் சிஏஏ சட்டத்தை பிரதமர் மோடி அமல் படுத்தி உள்ளார் - ஜவாஹிருல்லா பேட்டி

By Velmurugan s  |  First Published Mar 13, 2024, 10:02 PM IST

பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் தான் சிஏஏ சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.


மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மாநிலத் தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் நிர்வாகிகளின் கருத்துகளும் கேட்கப்பட்டன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் வேட்பாளர் பட்டியல் - பாஜக துணைத்தலைவர்

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலத் தலைவர் ஜவஹிருல்லா, பாஜகவின் மதவாத செயல் திட்டங்களை நிறைவேற்றிட தேர்தலை கருவியாக சூழ்ச்சியோடு செயல்பட்டு வருகிறது. இந்த  அபாயாத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காக இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்து நாட்டை பாசிச அபாயத்தில் இருந்து மீட்டு தமிழ்நாடு, புதுவையில் திமுக தலைமையிலான அணியை ஆதரிப்பது, வருகிற 2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து நிரப்பப்படும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி கட்டாயமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு தொடுப்பது என நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் கட்டண படுக்கையறை - அமைச்சர் தகவல்

தொடர்ந்து பேசுகையில், இந்தியா கூட்டணி தற்போது பலமாக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக நீங்கள் கேட்டிருந்தால் தயக்கமாக இருந்திருக்கும். தற்பொழுது இந்தியா கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தோல்வி பயம் பாஜகவுக்கும், மோடிக்கும் வந்துள்ளது. அதனால் தான் அவசர அவசரமாக விதிமுறைகளை வகுத்து சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

click me!