இளைஞர்களுடன் உற்சாகமாக மராத்தான் ஓடிய அமைச்சர் அன்பில் மகேஷ், பொன்முடி!

By Manikanda Prabu  |  First Published Feb 25, 2024, 2:01 PM IST

திருச்சியில் இளைஞர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி ஆகியோர் இளைஞர்களுடன் உற்சாகமாக மராத்தான் ஓடினர்


தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கங்கள், நலத்திட்ட உதவிகள், மராத்தான் ஓட்டம், விளையாட்டுப் போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பாகவும், தொ.மு.ச  தொழிற்சங்கம் சார்பாகவும் திருச்சி சுப்பிரமணியபுரம் அருகே உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று மராத்தான் போட்டி நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

undefined

ஒரே ஒரு தொகுதி தான்.. அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டி.! திமுகவின் நிபந்தனையால் அதிர்ச்சியில் வைகோ

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகம், திமுக துணை பொது செயலாளர் பொன்முடி, திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மரத்தான் ஓட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஓடினர். திமுக துனை பொது செயலாளர் பொன்முடி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்  திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த மராத்தான் போட்டியில்  இளைஞர்களுடன் ஓடி உற்சாகத்தை ஏற்படுத்தினர்.

click me!