பழங்குடியின பெண் வைத்த பொட்டை அண்ணாமலை அழித்தது ஏன்.? வீடியோ வெளியிட்டு கேள்வி கேட்கும் காயத்ரி ரகுராம்

Published : Apr 23, 2024, 08:19 AM IST
பழங்குடியின பெண் வைத்த பொட்டை அண்ணாமலை அழித்தது ஏன்.? வீடியோ வெளியிட்டு கேள்வி கேட்கும் காயத்ரி ரகுராம்

சுருக்கம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பழங்குடியின பெண் நெற்றியில் வைத்த பொட்டை அண்ணாமலை அழித்தது தொடர்பாக வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வரும் நிலையில், நெற்றியில் வைத்த பொட்டை அண்ணாமலை அழித்தது ஏன் என காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். 

அண்ணாமலையை வரவேற்ற பெண்கள்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை வீதி, வீதியாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.  அந்தவகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று கடந்த வாரம் வாக்கு சேகரித்தார். அப்போது பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாமலை வரவேற்று ஆரத்தி எடுத்துள்ளார்.

கஞ்சா தலைநகரமாக மாறிய தமிழகம்.. குற்ற சம்பவங்களை லிஸ்ட் போட்டு திமுக அரசை விளாசும் அண்ணாமலை.!

நெற்றியில் பொட்டை அழித்த அண்ணாமலை

தொடர்ந்து அண்ணாமலை அப்பகுதி மக்களிடம் கோரிக்கை கேட்டுக்கொண்டிருந்த போது அந்த பழங்குடி இன பெண் அண்ணாமலை நெற்றியில் வெற்றி திலகமிடுகிறார். இதனை அண்ணாமலை அடுத்த நொடி அழித்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக நடிகையும், அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் இந்த வீடியோவை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். அதில்,  கோவை பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மலை கிராம பழங்குடியின பெண்கள் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைத்தனர்.

 

பொட்டை அழித்ததற்கு காரணம் என்ன.?

பழங்குடியின பெண்கள் நெற்றியில் திலகமிட்ட அடுத்த சில நிமிடங்களில் அதனை அண்ணாமலை அழிக்கவே அங்கிருந்த பெண்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் என காய்த்ரி ரகுராம் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். அதில் அண்ணாமலை தனது நெற்றியில் வைத்த பொட்டை அழிக்கவில்லையென்றும், பொட்டில் நீர் வடிந்தத்தாகவும் அதனை தான் அண்ணாமலை அழித்ததாக கூறியுள்ளனர். 

ஒரு சொம்புக்கு போரா.. கர்நாடகா மாநிலத்தில் வெடித்த சொம்பு அரசியல்.. பாஜக Vs காங்கிரஸ் மோதல்.. ஏன்?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்காவை கண்டித்து போராட்டம்.. பாடகர் கோவனை வெச்சு செய்யும் தவெகவினர்.. அட இதான் விஷயமா!
அமைச்சர்களின் குடுமியை பிடித்து ஆட்டும் இபிஎஸ்..! ஆளுநரிடம் முறையிட திட்டம்