கஞ்சா தலைநகரமாக மாறிய தமிழகம்.. குற்ற சம்பவங்களை லிஸ்ட் போட்டு திமுக அரசை விளாசும் அண்ணாமலை.!

Published : Apr 23, 2024, 06:30 AM ISTUpdated : Apr 23, 2024, 06:37 AM IST
கஞ்சா தலைநகரமாக மாறிய தமிழகம்.. குற்ற சம்பவங்களை லிஸ்ட் போட்டு திமுக அரசை விளாசும் அண்ணாமலை.!

சுருக்கம்

தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் காவல்துறைக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை?

கஞ்சா கடத்துபவர்கள் விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்ததில் கஞ்சா போதையில் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரை பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை இளைஞர்கள் ஆபாசமாக திட்டியும் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழகத்தில், கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள், காவல்துறையினரைத் தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள், கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரைத் தாக்கிய நபர் என கடந்த மூன்று நாட்களில், வெளிவந்த செய்திகள், பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: ஒட்டு போடாததால் பெண் அடித்து கொலை.? திமுகவினரிடம் இருந்து தமிழகத்தை முதலில் ஸ்டாலின் காப்பற்றட்டும்- அண்ணாமலை

தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் காவல்துறைக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை?

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாகச் செயல்பட்டதைக் கண்டுகொள்ளாமல், மூன்று ஆண்டுகளாகக் கோட்டை விட்டது போல, கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:  ரூ.4 கோடி பறிமுதல்: ஆஜராக அவகாசம் கோரிய பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!