மாட்டு வண்டியில் மணல் கடத்திய நால்வர் கைது; கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் அதிரடி…

Asianet News Tamil  
Published : Jul 07, 2017, 07:00 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
மாட்டு வண்டியில் மணல் கடத்திய நால்வர் கைது; கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் அதிரடி…

சுருக்கம்

Four arrested smuggling the sand

திருவள்ளூர்

திருவள்ளூர் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் மாட்டு வண்டியில் மணல் கடத்திய நால்வரை கைது செய்தனர். மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா உதவி ஆய்வாளர் ராக்கிகுமாரி மற்றும் காவலாளர்கள் திருவள்ளூரை அடுத்த சேலைகண்டிகை பகுதியில் சுற்றுப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த மூன்று மாட்டு வண்டிகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த புங்கத்தூரைச் சேர்ந்த விமல்ராஜ் (27), ரஜினி (25), ராஜ்குமார் (19) ஆகியோரை காவலாளர்கள் கைது செய்தனர்.

அதேபோல திருவள்ளூர் நகர உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலாளர்கள் திருவள்ளூர் கற்குழாய் தெருவில் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மாட்டு வண்டியை பறிமுதல் செய்து அதனை ஓட்டிவந்த திருவள்ளூரைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பவரை கைது செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் காவலாளர்கள் நேற்று முன்தினம் மணவாளநகர் பகுதியில் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. காவலாளார்கள் மணல் கடத்தியதாக ஐந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி