அளவுக்கு அதிகமாக மதுக்குடித்ததால் மாணவர் மரணம்…!!!

Asianet News Tamil  
Published : Jul 06, 2017, 10:22 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
அளவுக்கு அதிகமாக மதுக்குடித்ததால் மாணவர் மரணம்…!!!

சுருக்கம்

Student death due to overdose drink

கோவையில் படித்து வந்த சூடான் நாட்டு கல்லூரி மாணவன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் திடீர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சூடான் நாட்டை சேர்ந்தவர் இஸ்மல் இப்ராகிம். இவரது மகன் அப்துல் அஜீஸ். இவர் கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2014-ம் ஆண்டு பி.எஸ்சி. மைக்ரோ பயாலஜி படித்து வந்தார்.

இதைதொடர்ந்து இரண்டாம் ஆண்டு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, கோவை சரவணம்பட்டியில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கியுள்ளார்.

இவருக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்த்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம்போல் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு பல்நோக்கு போது மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த அப்துல் அஜீஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சூடான் நாட்டில் உள்ள அவரது தந்தை இஸ்மல் இப்ராகிமிற்கு தகவல் கொடுத்தனர்.

சூடான் நாட்டில் இருந்து அப்துல் அஜீஸ்சின் பெற்றோர் வந்ததும், அவர்களின் அனுமதியுடன் அவரது உடலை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி