சாந்தோமில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி…!!! – டிரைவர், கிளினர் கைது

Asianet News Tamil  
Published : Jul 06, 2017, 07:42 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
சாந்தோமில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி…!!! – டிரைவர், கிளினர் கைது

சுருக்கம்

water lorry accident with bike in one man death by driver and cleaner arrested

சாந்தோமில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலி…!!! – டிரைவர், கிளினர் கைது

சென்னை சாந்தோம் நெடுஞாலையில் இருசக்கரவாகனத்தில் சென்ற வாலிபர் தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் அனிருத். இவர் எம்.ஆர்.சி நகரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

தினமும் நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை பணிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர், பணியை முடித்து கொண்டு மாலை தான் வேலை பார்க்கும் நிறுவனம் வெளச்சேரியில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி ஒன்றிற்கு தனது நண்பர் ராகவேந்திரனுடன் போயுள்ளார்.  

அப்போது சாந்தோம் நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த தண்ணீர் லாரி அனிருத்தின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இதில் அனிருத் லாரியின் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அடியில்லாமல் உயிர் பிழைத்த ராகவேந்திரன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதையடுத்து அங்கிருந்த சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாரியின் டிரைவர் மதியழகன், கிளினர் குமரேசன் ஆகியோரை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி