
மதுரையில் வழக்கறிஞர் என கூறி போலியாக செயல்பட்டு வந்த ராமக்கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை சம்மந்திபுரம் பாரதியார் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றீ வருவதாக கூறி வந்துள்ளார்.
இதை நம்பி பலர் அவரிடம் பல்வேறு வழக்கு காரணமாக அனுகியுள்ளனர். மேலும் சில அரசியல் கட்சிகார்ர்களிடம் தனது லெட்டர்பேடு மூலம் பணம் வாங்கி ரசீது கொடுத்து 30 லட்சம் ரூபாய் வரை ராமகிருஷ்ணன் ஏமாற்றி உள்ளார்.
இதையறிந்த சிலர் மதுரை எஸ்.எஸ் காலனி போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து போலிசார் ராமகிருஷ்ணன் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் அவர் வழக்கறிஞர் என போலியாக கூறி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.