
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி
கேரள மாநிலம் பத்தனம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. தோலிகட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தவர். திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை படித்தார். இந்தியாவின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார். கேரள மாநிலத்தில் நீதிபதியாகப் பணியாற்ற பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார்.
உடல் நலக்குறைவால் காலமானார்
தமிழகத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது கருணாநிதியின் கோரிக்கையின் பேரில் பாத்திமா பீவிஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஜெயலலிதா ஆட்சியிலும் ஆளுநராக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் இன்று காலை காலமானார் .
இதையும் படியுங்கள்