சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிபதி முன்பாக பதில் அளித்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு பதிவுக்காக வியாழன் கிழமை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேசும், செந்தில்பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என்.பரணிகுமாரும் ஆஜராகினர்.
மஞ்சள் கயிற்றின் ஈரம் காய்வதற்குள் வெடித்த சண்டை; காதல் மனைவியை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிபதி எஸ்.அல்லி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்துக்காட்டி குற்றச்சாட்டை பதிவு செய்தார். மேலும் உங்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
அடக்கடவுளே; பள்ளியில் நண்பர்களுடன் ஆசையாக விளையாடிய சிறுவனுக்கு இப்படி ஒரு முடிவா? மாணவர்கள் ஷாக்
நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, “அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் குற்றமற்றவன். என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் காழிப்புணர்ச்சி காரணமாக எனக்கு எதிராக பொய்யாக புனையப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. மேலும் எனக்கு எதிரான சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன்” என பதில் அளித்தார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி அடுத்த விசாரணையை வருகின்ற 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.