ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த நல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் வி.பி.சண்முகசுந்தரம். 1996ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
திமுக முன்னாள் எம்.பி. வி.பி.சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த நல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் வி.பி.சண்முகசுந்தரம். 1996ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் திமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி? சபதம் எடுத்த கேங்! உளவுத்துறை வார்னிங்! உச்சக்கட்ட பதற்றத்தில் தலைநகர்!
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வி.பி.சண்முகசுந்தரம் (75) இன்று காலமானார். இவரது மறைவு திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவுக்கு தொண்டர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்! யார் கூப்பிட்டாலும் போக கூடாது! திருமாவளவன் நிர்வாகிகளுக்கு கண்டிஷன்..!
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி செய்தி குறிப்பில்: கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.பி.சண்முகசுந்தரம் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். கழகப் பற்றாளராக விளங்கிய வி.பி.சண்முகசுந்தரம் அவர்கள், 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றியவர். இளம் வயது முதலே கழகப் பற்றாளராக விளங்கிய அவர், கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.