வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் - அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

By Velmurugan sFirst Published Dec 21, 2023, 2:17 PM IST
Highlights

தென்மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இதற்கு முன்னால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது.

ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் மாநகர் பகுதிக்குள் புகுந்து அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களும் மிகுந்த சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடுகள் தோறும் கணக்கெடுத்து 25,000 ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். 

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி

பாதிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை புதிதாக மீண்டும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம் எங்கு எங்கு மழை பெய்யும், எவ்வளவு மழை பெய்யும் என முன்னெச்சரிக்கையை முறையாக வழங்கி உள்ளது. அரசுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். எடுக்க தவறி விட்டு வானிலை ஆய்வு மையம் மீது குற்றம் சுமத்துவது தவறு. பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் இருந்து வரும் மொழிகளை அரசியலாக்குவது என சொல்லக்கூடாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்தடை ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை கட்டுவதை பொதுமக்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் தள்ளி வைக்க வேண்டும். சென்னையை விட தென் மாவட்டங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத்திற்கு 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 

அதிகாரிகளின் அலட்சியத்தால் பைக்கோடு பல்டி அடித்த இளைஞர்கள்; சாலையை கண்டு அஞ்சும் வாகன ஓட்டிகள்

வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட பொருட்கள் மிகுந்த சேதமடைந்துள்ளன. அதனையும் கணக்கெடுத்து பொருட்களையும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி புரியும் வேலையில் மத்திய அரசு நிதி வழங்கும் முன்பே மக்களுக்கு எந்த மாதிரியான நிதி வழங்க வேண்டும் என்பதை திட்டமிட்டு மக்களுக்கு வழங்கினர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை முன்னுதாரணமாக எடுத்து அரசு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

click me!