CM MK Stalin தூத்துக்குடி-நெல்லை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

By Dinesh TG  |  First Published Dec 21, 2023, 1:09 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடி - திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 


வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக வட மற்றும் தென் மாவட்டங்களை வெள்ளம் புரட்டி போட்டது. குறிப்பாக வரலாறு காணாத வகையில் மழையானது கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், படகு மூலம் செல்ல முடியாத இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி, நெல்லை பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

Tap to resize

Latest Videos

click me!