'எதிலும் தமிழ்நாடு முதலிடம்' என்ற பாதையில் நடைபோடுவோம் - கலைஞரின் நினைவு தினத்தில் முதல்வர் முழக்கம்

Published : Aug 07, 2025, 08:38 AM IST
Mk Stalin

சுருக்கம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு எதிலும் தமிழ்நாடு முதலிடம் என்ற பாதையில் நடைபோடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன்படி சென்னை ஓமந்தூரார் பகுதியில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடம் நோக்கி பேரணியாக செல்கிறார்.

முதல்வருடன் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.னஎ்.நேரு, சேகர்பாபு, எ.வ.வேலு, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட திமுக.வின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தலைவர் கலைஞர் -

முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!

தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!

அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சொந்த கட்சியிலிருந்து அடித்து விரட்டப்பட்ட அன்புமணி! இனியாவது உண்மையை ஆராய்ந்து அறிக்கை விடுங்க! சும்மா இறங்கி அடிக்கும் MRK