
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், பல்வேறு கட்சிகளும் தங்களுடைய தொகுதி பங்கீடு குறித்த மும்முரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்பி விஜயகுமார் அவர்கள் தற்பொழுது தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களது முன்னிலையில் பாஜகவில் இணைந்திருக்கிறார்.
முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த அனுஷா ரவி, அண்ணாமலையின் முன் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்ற முடிவு தனக்கு அதிருப்தி அளிப்பதாக கூறி, அக்கட்சியில் இருந்து விலகிய அனுஷா ரவி தற்பொழுது பாஜகவில் இணைந்திருக்கிறார்.
ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்.. விட்டதை பிடிக்க இபிஎஸ்க்கு விடாமல் குடைச்சல்..!
அதேபோல அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கம் அவர்களும், அதிமுகவின் முன்னாள் எம்பி விஜயகுமாரும் தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளனர்.
சென்னை தி-நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அவர்கள் இன்று பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பல கட்சிகளில் இருந்து விலகிய அரசியல் தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் பாஜகவில் இணைந்ததோடு மட்டுமல்லாமல் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.
“பெண்களை சக்தியின் வடிவமாக பார்க்கும் மாமனிதர்..” பிரதமர் மோடிக்கு ராதிகா சரத்குமார் புகழாரம்...