தடுப்பு வேலியை சேதப்படுத்திய அரிக்கொம்பன் யானை..! அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் திணறும் வனத்துறை

Published : Jun 11, 2023, 09:45 AM IST
தடுப்பு வேலியை சேதப்படுத்திய அரிக்கொம்பன் யானை..! அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் திணறும் வனத்துறை

சுருக்கம்

தடுப்பு வேலிகளை சேதப்படுத்திய அரிசி கொம்பன், மேல் கோதையாறு பகுதிகுள் வந்தது. இதனையடுத்து  அரிகொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டப  டயர்களை எரித்தும், நெருப்பு வைத்தும் அடர்ந்த வனபகுதிக்குள் விரட்ட வனத்துறை போராடி வருகின்றனர்.

அரிகொம்பன் யானை- பீதியில் மக்கள்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை தாக்கியதில் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இதன் காரணமாக கேரள மக்கள் அச்சப்பட்டு வந்த நிலையில்,  கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கேரள வனத்துறையினர் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதியில் யானை விடப்பட்டது. இதனையடுத்து அரிக்கொம்பன் யானை தமிழக பகுதிக்குள் புகுந்தது. மேகமலை பகுதிக்குள் சென்ற யானையால் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் சுற்றித்திரிந்த யானையை வனத்துறையினர் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 

புதிய வாழ்விடத்தில் அரிக்கொம்பன்

இதனையடுத்து யானையை பிரத்யேக லாரியில் கொண்டு சென்ற வனத்துறை அதிகாரிகள், யானை நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு வனப்பகுதி வழியில் உள்ள  குட்டியாறு டேம் என்ற பகுதியில் அரிக்கொம்பன் யானை விடுவிக்கப்பட்டது. யானையின் செயல்பாடுகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனையடுத்து யானையானது புதிய வாழ்விடத்தில் நன்றாக உணவு அருந்துவதாகவும், தண்ணீர் குடிப்பதாகவும் வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் முத்துக்குழிவயலில் பெரும்பாலான பகுதி குமரி வனப்பகுதியை சேர்ந்தது. எனவே, அந்த பகுதியில் விடப்பட்ட யானை குமரி வனப்பகுதிக்குள் வந்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேல் கோதையாறுக்கு வந்த யானை

இதனையடுத்து அரி கொம்பன் யானையை அடர்ந்த வனபகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறை முயற்சித்தனர். ஆனால் வனத்துறையினர் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படாத நிலையே நீடித்து வந்தது.  தடுப்பு வேலிகளை சேதப்படுத்திய அரிசி கொம்பன், மேல் கோதையாறு பகுதிகுள் வந்தது. இதனையடுத்து  அரிகொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டப  டயர்களை எரித்தும், நெருப்பு வைத்தும் அடர்ந்த வனபகுதிக்குள் விரட்ட வனத்துறை போராடி வருகின்றனர். அரிகொம்பன் யானை வருகையால் மேல் கோதையாறு பகுதியில் உள்ள மின் வாரிய ஊழியர்கள் தங்கள் பணியை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். களக்காடு முண்டந்துறை புலி காப்பகம் துணை இயக்குனர் செண்பக பிரியா தலைமையில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு அரிசி அரிசி கொம்பன் யானையை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அச்சப்பட தேவையில்லை

இந்த நிலையில் இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையானது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. யானையின் நடமாட்டத்தினை களக்காடு முண்டந்துறை வனப்பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். யானையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் மூலம் யானையின் இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். யானையை சிறப்புக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை என தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

புதிய இடத்தில் அரிகொம்பன் யானை என்ன செய்கிறது.? எப்படி உள்ளது.? வனத்துறை செயலாளர் கூறிய புதிய தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!