பல மணி நேரமாக உயிருக்கு போராடும் யானை..! சிகிச்சை அளிப்பது யார்? குழப்பத்தில் தமிழக - கேரளா வனத்துறையினர்

By Ajmal Khan  |  First Published Aug 16, 2022, 11:24 AM IST

உடல்நலக்குறைவால் பல மணி நேரமாக ஆற்றில் நின்று கொண்டிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் தமிழக, கேரள வனத்துறையினர் உள்ளதால், யானை உயிரிழக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 


யானைக்கு உடல்நிலை பாதிப்பு

யானைகள் அதிகமாக காணப்பட்டால் தான் வனங்கள் செழிப்பாக இருக்கும், ஆனால் யானைகளின் வழித்தடத்தை இன்று பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்வதால் தங்களது  வலசை பாதைக்கு செல்ல முடியாமல் ஒரே இடத்தில் யானைகள் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. அப்படியே யானை தங்கள் பாதை கண்டறிந்து வந்தால் மனிதர்களுக்கும் - யானைகளுக்கும் மோதல் ஏற்படும் நிலைஉருவாகிறது. இந்தநிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை ஆனைகட்டி மலைப்பகுதியில் நீண்ட நேரமாக ஆற்றில் நிற்பது தான் தற்போது பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பம் தமிழக-கேரள வனத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளதால் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேல் யானை ஒரே இடத்தில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

நாளை கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

இரு மாநில எல்லையில் நிற்கும் யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளது 70% வனப்பகுதி கொண்ட ஆணையிட்டியில் ஏராளமான யானைகள் உள்ளது யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி வனப்பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும்.  இந்நிலையில் ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன்  8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருக்கிறது. எந்த வித உணவும் உண்ணமுடியாமலும், தண்ணீரும் குடிகுக முடியாமல் யானை தவித்து வருகிறது.இந்த நிலையில்  நேற்று மாலை முதல் இந்த யானை ஆற்றில் நின்று கொண்டு இருப்பதால் இதற்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் யோசனை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் கேரளா வனப்பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத்துறையும்,  தமிழக வனப்பகுதிக்குள் வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் நிற்பதால் யானை எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டுள்ளது.

எனக்கு வாய் நீளமா குறைவா என்பது பிறகு தெரியும்... ஜெயக்குமாரை அலறவிட்ட மா.சுப்பிரமணியன்

இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை

இது குறித்து சூழலில் ஆர்வலர்கள் கூறுகையில் உடனடியாக தமிழக வனத்துறையினர் இந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் கேரள வனத்துறையினர் நேற்று முதல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். அவர்கள் யானைக்கு சிகிச்சை அளிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் யானையை காப்பாற்ற தமிழக வனத்துறையினர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கமாக காவல்துறையில் எல்லை பிரச்சனை இருந்து வரும் நிலையில் வனத்துறையில் எல்லை பிரச்சனையால் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக-கேரளா வனத்துறையினர் யோசனை செய்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடையே  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தமிழக வனத்துறை முதன்மைச்செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
 

இதையும் படியுங்கள்

சுதந்திர தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லையா..? கடைகள்,நிறுவனங்களுக்கு செக் வைத்த அரசு

 

click me!