Tamilnadu Rains : ஜனவரி 24 வரை மழை விடாது.. மறுபடியுமா…? எப்போதான்யா மழை நிற்கும்…?

By Raghupati RFirst Published Dec 1, 2021, 7:23 AM IST
Highlights

அடுத்த மாதம்  ஜனவரி 24 வரை மழை நிற்காது என்று தெரிவித்து உள்ளது வானிலை ஆய்வு மையம்.

தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக, அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக,  தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இலங்கை அருகே தற்போது நீடித்து வரும் காற்று சுழற்சி இன்று காலையில் வலுவிழந்து, மெலிந்த காற்று சுழற்சியாக மாறியுள்ளது. 

இது இன்று மாலைக்குள் முற்றிலுமாக செயலிழந்து விலகும். இது தவிர, கேரளா அருகே நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து சென்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி,  வடக்கு நோக்கி சென்று, குஜராத் பகுதிக்கு சென்று கரையைக் கடக்கும். இந்நிலையில், தென் சீனக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் நேற்று இரவு தாய்லாந்து வளைகுடாப் பகுதிக்கு நுழைந்து, இன்று அதிகாலையில் தாய்லாந்துக்கும், மலேசியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் அதாவது தெற்கு தாய்லாந்து பகுதியில் நிலை கொண்டு இருந்தது. ஆனால்,  உயர் அழுத்தம் காரணமாக இன்று இரவு அது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு வரும். 

அந்தமானின் தெற்குப் பகுதியை நாளை கடக்கும். பிறகு தான் அது வங்கக் கடல்பகுதிக்கு வரும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த ஆசியப் பகுதியில் குறிப்பாக தென் சீனக் கடல், தாய்லாந்து வளைகுடா, வங்கக் கடல் ஆகியவை இணைந்த அமைப்பும், குமரிக்கடல், அரபிக் கடல் இணைந்த அமைப்பையும் நீண்ட கால வானிலை ஆய்வின்படி உற்றுநோக்கும் போது, அந்தமான் பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து வந்து பின்னர் மீண்டும் மேற்கு நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, நவம்பர் 30ம் தேதி வங்கக் கடல் வழியாக ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிக்கு வரும் என்று உலக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 

இருப்பினும், அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மாறும் போது, அது டிசம்பர் 3, 4, 5ஆம் தேதிகளில் தமிழகம் வழியாக அரபிக் கடல் நோக்கி செல்லும். அப்படி செல்லும் போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்.

தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை வெயில் நிலவும். அதனால் ஏற்படும் வெப்ப சலனத்தால் தமிழகத்தில் மழை பெய்யும். குறிப்பாக மாலை இரவு நேரங்களில் மழை பெய்யும். அதனால் நீலகிரியில் அதிக மழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், தென் மாவட்டங்களில் சற்று அதிமாக மழை பெய்யும். இதையடுத்து, டிசம்பர் 6, 7ஆம் தேதிகளில் மழை இருக்காது. 7, 8ஆம் தேதிகளில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த காற்றழுத்தம் உருவாகி 9ம் தேதி மேற்கு நோக்கி நகர்ந்து 10, 11, 12ஆம் தேதிகளில் இலங்கை மற்றும் தமிழகத்துக்கு நெருங்கி வரும். அதன் காரணமாவும் தமிழகத்தில் மழை பெய்யும். அதற்கு பிறகு டிசம்பர் 15ம் தேதி வரை மழை பெய்யாமல் நின்று, 16ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை அடுத்த காற்றழுத்தம் ஏற்பட்டு மழை பெய்யும்.

டிசம்பர் 26ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம் உருவாகி,  டிசம்பர் 26ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை மழை பெய்யும். இதன்படி பார்த்தால் இடைவெளி விட்டு வாரம் ஒரு காற்றழுத்தம் வீதம் தமிழகத்துக்கு மழை கொடுக்க உள்ளது. இதன்படி டிசம்பர் மாதம் 4 காற்றழுத்தங்களும், ஜனவரி மாதத்தில் 3 காற்றழுத்தங்கள் என்று உருவாகி ஜனவரி மாதம் 24ஆம் தேதி வரை மழை பெய்யும்’ என்றும் தெரிவித்துள்ளது.

click me!