வலுகட்டாயமாக கைது செய்யும் சேலம் போலீஸ்; தைரியமாக எதிர்க்கும் பிரியாணிகடைகாரர்…

 
Published : Feb 21, 2017, 08:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
வலுகட்டாயமாக கைது செய்யும் சேலம் போலீஸ்; தைரியமாக எதிர்க்கும் பிரியாணிகடைகாரர்…

சுருக்கம்

சேலத்தில் வலுகட்டாயமாக கைது செய்யும் போலீஸை எதிர்த்து வாரண்ட் இருக்கா என்று தைரியமாக எதிர்த்தார் பிரியாணிக் கடைகாரர் ஒருவர். மாமூல் கேட்டு தர மறுத்ததால், கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

சேலம் மனிதநேய மக்கள் கட்சியின் மண்டல துணை பொருளாளர் இப்ராஹீம். இவர் சேலத்தில் புதிதாக பிரியாணி கடை ஒன்றை திறப்பதற்கான பணிகளை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது, அந்தப்பகுதி வழியாக வந்த செவ்வாய்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் பாரதி மோகன், இப்ராஹிமிடம் மாமூல் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இன்னும் கடையே திறக்கல, அதுக்குள்ள மாமூலா? என்று இப்ராஹீம் மாமுல் தர மறுத்துள்ளார்.

கோபம் தலைக்கு சுர்ர்ரென்று ஏறியது அந்த இன்ஸ்பெக்டருக்கு. என்னையே எதிர்த்து பேசுகிறாயா? என்று இப்ராஹீம் மற்றும் அவருடன் இருந்த அஸ்கர் இருவரையும் சரமாரியாக அடித்து வாகனத்தில் வலுகட்டாயமாக ஏற்றி கைது செய்துள்ளார் பாரதி மோகன்.

அதற்கு இப்ராஹீம் என்ன எதுக்கு கைது பன்றீங்க? வாரண்ட் இருக்கா? என்று தைரியமாக எதிர்த்து உள்ளார்.

இதை பார்த்த சுற்றி இருந்தவர்கள், தங்களது மொபைல் போனில் இவையனைத்தையும் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்தப் பதிவு முகநூல், வாட்ஸ்-ஆப் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

மாதம், மாதம் தேதி தவறாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு, அரசின் அனைத்து சலுகைகளையும் இலவசமாக அனுபவித்துக் கொண்டு இருக்கும் காவலாளர்கள், யாருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமோ அவர்களிடம் இருந்தே வழிப்பறி நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மாணவர் புரட்சியின் போது சிறப்பாக பணியாற்றிய திருச்சி ஐபிஎஸ் அதிகாரியை பாராட்டும் அதே வேளையில், இது போன்ற தவறிழைக்கும் காவலாளர்களை வேலையை விட்டு தூக்கினால் இனி யாரும் இந்த தவறு செய்ய மாட்டார்கள் என்பது மக்களின் கருத்து.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!