
சட்டசபையில் மக்கள் விருப்பத்திற்கு எதிராக இபிஎஸ்-க்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்கள் தொகுதி செல்ல பயப்படுவதால், அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் ஒபிஎஸ், சசிகலா இடையே கடும் போட்டி நிலவியது.
பின்னர், சசிகலாவுக்கு சிறை உறுதியான பின்பு, தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறோம் நிச்சயம் வென்று விடுவோம் என்று நினைத்திருந்த ஒபிஎஸ்-க்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சசிகலா சிறைக்கு செல்லுமுன் எடப்பாடி கே.பழனிச்சாமியை முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்துவிட்டு சென்றார்.
பின், ஆட்சி அமைக்க அழைக்குமாறு இ.பி.எஸ், ஆளுநருக்கு கடிதம் அனுப்பி, பெரும்பாண்மயை நிரூபித்து முதல்வரானார்.
இதில், எம்எல்ஏக்கள் மக்களின் விருப்பத்திற்கு எதிராக வாக்களித்து இபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்துள்ளனர் என்று பரபரப்படுகிறது.
தமிழக சட்டசபையில் இபிஎஸ் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தபோது, எதிர் கட்சியினர் வெளியேற்றப்பட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து அவரவர் தொகுதிக்கு செல்ல எம்.எல்.ஏக்கள் ஆயத்தமானார்கள். ஆனால், உள்ளே ஒருவித பயமும் அவர்களை தொற்றிக் கொண்டது.
அவர்கள் எண்ண ஓட்டத்தைப் போலவே, காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏவை மக்கள் தொகுதிக்குள் நுழைய விடாமல் விரட்டி அடித்தனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிக்கு செல்லும் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அவர்கள் வீடு, அலுவலகங்களில் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராம.ஜெயலிங்கம் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் துப்பாக்கி ஏந்திய காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. நேற்று வரை அவர் தொகுதிக்கு வரவில்லை என்பது உண்மை.