கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற ஐவர் கைது; கொள்ளைக்கு பயன்படுத்திய கார், ஆயுதங்கள் பறிமுதல்...

Asianet News Tamil  
Published : Nov 18, 2017, 08:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
கூட்டுறவு  வங்கியில்  கொள்ளையடிக்க முயன்ற ஐவர் கைது; கொள்ளைக்கு பயன்படுத்திய கார், ஆயுதங்கள் பறிமுதல்...

சுருக்கம்

Five arrested for attempting robbery in cooperative bank Used car for robbery weapons seizure ...

மதுரை

மதுரையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற ஐந்து பேரை காவலாளர்கள் கைது செய்தனர். மற்றும் அவர்க கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கச்சிராயன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது. இங்கு, கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில்,   மதுரை கூடல்நகரைச் சேர்ந்த பார்த்திபன் (27), தங்கராஜூ (37), கார்மேகக் கண்ணன் (20) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.  

மேலும்  தலைமறைவாக இருந்த திருப்புவனத்தைச் சேர்ந்த கணேசன் (28), பிரேம்குமார் (28)  ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய கார், எரிவாயு சிலிண்டர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live Today 28 December 2025: வீடு வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.. குறைந்த வட்டி.. நிறைவேறும் வீட்டுக் கனவு.!
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி