
கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி, தமிழகம் கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது. அதன்படி 61நாட்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பாட்டு மீன் வளம் பெருக வாய்ப்புள்ளது.
இதனால் 61நாட்கள் முடியும் வரை அனைத்து மாவட்ட மீனவர்கள் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.
இன்றுடன் 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நள்ளிரவுடன், தடை முடிவுக்கு வருகிறது. இதனால் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.மீன் பிடிக்க தேவையான வலை போன்ற உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?
இதையும் படிங்க : திமுக அமைச்சரின் மதவெறி செயலை கண்டிக்கிறோம்.. ஒன்று திரளும் இந்து அமைப்புகள் - சமாளிக்குமா திமுக ?