எங்க வீட்டு பெண்ணையே போட்டோ எடுக்குறியா..? விக்ரம் பட கிளைமாக்ஸ் காட்சியின் போது தியேட்டரில் நடந்த செம்ம பைட்

Published : Jun 14, 2022, 10:07 AM IST
எங்க வீட்டு பெண்ணையே போட்டோ எடுக்குறியா..? விக்ரம் பட கிளைமாக்ஸ் காட்சியின் போது தியேட்டரில் நடந்த செம்ம பைட்

சுருக்கம்

விக்ரம் படத்தின் இறுதி காட்சியின் போது தியேட்டரில் படம் பார்க்க வந்த மருத்துவருக்கும், தியேட்டர் ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.  

விக்ரம் கிளைமாக்சில் தியேட்டரில் நடந்த சண்டை

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பபை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இந்தநிலையில், தேனி பழனிசெட்டிப்பட்டியில் உள்ள வெற்றி திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தை கோவையைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 10 பேர் வெற்றி திரையரங்கிற்கு வந்து திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தனர். திரைப்படம் முடிவதற்கு பத்து நிமிடங்கள் இருந்த நிலையில், இந்த திரையரங்கில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் ஜெயக்குமார் என்பவர் தனது செல்போனில் ஏதோ பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது தங்கள் வீட்டுப் பெண்ணை ஜெயக்குமார் படம் எடுப்பதாக நினைத்த மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயக்குமாரின் செல்போனை பறித்ததுடன், அவரை ஆபாசமாகப் பேசி சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.இதன் காரணமாக விக்ரம் பட கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டையை பார்ப்பதா அல்லது தியேட்டரில் நடைபெறும் சண்டையை பார்ப்பதா என்று தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.

மருத்துவர் மீது வழக்கு பதிந்த போலீஸ்

இந்தத் தாக்குதலில் ஜெயக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.முதுகு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதுடன்,வாயில் பற்கள் உடைந்து ரத்தமும் கொட்டியது.இதனையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக திரையரங்கு மேலாளர் ராஜா என்பவர் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் ஜெயக்குமாரின் செல்போனை ஆய்வு செய்த போது அவர் யாரையும் தவறாகப் படம் பிடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.இதனையடுத்து ஜெயக்குமாரை கடுமையாக தாக்கிய மருத்துவர் கார்த்திகேயன் (46) மற்றும் அவரது உறவினர்களான வரதராஜபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன்(31) மொட்டனூத்தைச் சேர்ந்த மகேந்திரன்(48) முருகேசன் (49) கணேசன் (48) ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக திரையரங்கிற்குள் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

பிக்பாஸ் நடிகையை துரத்திய மர்ம நபர்...! அலறி துடித்து வீடியோ பதிவிட்ட ரேடியோ ஆர்.ஜே. வைஷ்ணவி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.18 கோடி வரி செலுத்துங்கள்..! பிரியாணி மாஸ்டரை அதிர வைத்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!