தமிழக மீனவர்கள் சிறை பிடிப்பு – மார்ச் 17 வரை காவல்

 
Published : Mar 05, 2017, 05:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
தமிழக மீனவர்கள் சிறை பிடிப்பு – மார்ச் 17 வரை காவல்

சுருக்கம்

4 Rameswaram fishermen were trapped by Sri Lankan Navy ordered the remand extended

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் 4 பேரின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 7 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் விசை படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதுடன் குமாரவேல், சுப்பிரமணி, கார்த்திகை சாமி, நம்பு ஆகிய 4மீனவர்களையும் கைது செய்தனர்.

இதையடுத்து சிறைபிடிக்கபட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று நீதிபதி முன் ஆஜர் படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 54 நாட்களாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. வாய்தா நாளான நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவர்களுக்கு மார்ச் 17 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி அலெக்ஸ் ராஜா உத்தரவிட்டார். பின்னர், மீனவர்கள் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். 

PREV
click me!

Recommended Stories

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
Tamil News Live today 23 December 2025: ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்