Latest Videos

60 நாட்கள் மீன் பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!புலம்பும் மீனவர்கள்

By Ajmal KhanFirst Published Jun 16, 2024, 11:48 AM IST
Highlights

மீன்பிடி தடை கலாம் முடிந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்குபோதிய மீன் வரத்து கிடைத்தாலும் உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 

மீன் பிடி தடைக்காலம்

ஆண்டு முழுவதும் கடலில் மீன் பிடிப்பதால் மீன்களின் உற்பத்தை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மீன்களின் உற்பத்தியை அதிகரித்தால் தான் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக உள்ளதால் அந்த காலத்தில் மீன்களை பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. இந்த கால கட்டத்தில் மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பாக உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த 60 நாட்கள் தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகு, வலைகளை சரிசெய்யும் பணியில் ஈடுபடுவார்கள். 

யு பி எஸ் சி முதல்நிலை தேர்வு.! நாடு முழுவதும் இன்று தொடங்கியது - இத்தனை லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்களா.?

மீனவர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் மீன்பிடித்தடை காலம் முடிவடைந்ததையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவில் மீன் வரத்து கிடைத்தாலும் பிடித்து வைத்த நண்டு, இறால்,கணவாய் உள்ளிட்ட மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததாலும், மீன்களை வாங்க வெளி மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வராததால் மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்ததாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

Vegetables Price : கிடு,கிடுவென உயரும் காய்கறிகள் விலை.! ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்.! அதிர்ச்சியில் பொதுமக்கள்

click me!