Vijaya Baskar : செக் வைத்த போலீஸ்.!! எம்.ஆர் விஜயபாஸ்கர் திடீர் தலைமறைவு.? காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Jun 16, 2024, 11:28 AM IST

அதிமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை மோசடியாக அபகரித்த முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் முன் ஜாமின் வழங்காத காரணத்தால் எந்த நேரமும் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தால் விஜயபாஸ்கர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. 


100 கோடி மோசடி புகார்

கரூர் மாவட்டத்தில் திமுகவிற்கு போட்டியாக திகழ்பவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  இவர் மீது அதிமுக நிர்வாகி ஒருவரே 100 கோடி ரூபாய் நில அபகரிப்பு புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலதிபரான இவர் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் பரமத்தி வேலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருவதாகவும், அதிமுகவில் கரூர் மாவட்டத்தில் முக்கிய நபராக இருப்பதாக தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்ததால் எனக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், எனக்கும் இடையே பல ஆண்டுகளாக பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது. 

Tap to resize

Latest Videos

10.5% இட ஒதுக்கீடு வேண்டுமா.? தேர்தலில் திமுகவை தோற்கடிக்கனும்- வன்னியர்களுக்கு அழைப்பு விடுத்த ராமதாஸ்

மிரட்டி நிலம் அபகரிப்பு

இந்த நிலையில் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் உள்ள எனக்கு சொந்தமான  ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை தான் கூறும் 4 பேர் பெயரில் எழுதி தர வேண்டும் என மிரட்டியதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் தனது மகள்  ஷோபனா பெயருக்கு எனது சொத்துக்களை தான செட்டில்மெண்ட் எழுதி வைத்ததாக கூறியுள்ளார். ஆனால், விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனது மகள் ஷோபனா மற்றும் என் மனைவியை மிரட்டி, போலி ஆவணங்களை வழங்கி மோசடியாக சொத்துக்களை பதிவு செய்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார். எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது அடியாட்கள் மீதான அச்சத்தின் காரணமாக இதுவரை போலீசில் புகார் அளிக்காத நிலையில், எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

அதிமுக புறக்கணித்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டியிடுவது ஏன்.? வானதி சீனிவாசன் அதிரடி பதில்

முன் ஜாமின் மனு ஒத்திவைப்பு

இது குறித்து கரூர் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி கரூர் டவுன் காவல் நிலையத்தில் 7 பேர்கள் மீது கடந்த 9ம்தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தான் முன் ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வருகிற 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு நேற்று மாற்றப்பட்டது. எனவே 100 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு வழக்கில் எந்த நேரத்திலும் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!