முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் மீறி அதிமுகவால் எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலும் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள். இந்த முடிவை எடுக்க வேண்டிய ஒரு சூழலில் இருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் சூழலில் நிச்சயமாக திமுகவுக்கு இதைவிட பெரிய வெற்றியாக தான் இருக்கும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு செய்கின்ற பணி மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றதோ அதை தீர்க்க வேண்டும் அவர்களுக்காக ஒவ்வொரு நிமிடமும் யோசித்து அதை செய்ய வேண்டும் என்று அவர் செய்கின்ற காரணத்தினால் தான் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றார். அவருக்கு ஒரு நன்றி பாராட்ட வேண்டும் என்று சொன்னபோது கூட அவர் வேண்டாம் என்று சொல்லி புறப்பட்டு சென்று விட்ட நிலையில் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் எல்லாம் பேசித்தான் பிறகு அதனை ஏற்றுக்கொண்டார் என்றும் அந்த அளவிற்கு அவர் எதையும் தன்னடக்கத்துடன் செய்யக்கூடிய முதலமைச்சராக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
undefined
இதையும் படிங்க: ஸ்வீட் பாக்ஸில் வெற்றியைத் தட்டிச்சென்ற ராகுல்! இது தான் 41வது வெற்றி! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
இந்தியாவிலேயே ஒரு மாநிலம் முழுவதும் வெற்றி பெற்ற ஒரு மாநிலம் எங்கும் கிடையாது அதை முதலமைச்சர் தமிழ்நாட்டில் செய்திருக்கிறார் எனவும் அதற்கு காரணம் அவர் மக்களுக்கு செய்த சேவையும் மேலும் சேவை செய்வார் என்று மக்கள் அவர் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையும் தான் எனவும் கூறினார். மேலும் கட்சியில் இருக்கின்ற அடிமட்ட சகோதரர்கள் உடன்பிறப்புகள் செய்த பணிதான் தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதால் தனக்கு என்ன பாராட்டுகளை கொடுத்தாலும் நான் அவர்களுக்கு கொடுக்கிறேன் என்று முதல்வர் கூறியதாகவும் எனவே அப்படிப்பட்ட தலைவர் உள்ள காரணத்தினால் தான் இப்படிப்பட்ட வெற்றியை பெற்று இருக்கிறோம் என்றும் பெருமிதம் கொண்டார்.
தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று அதிமுக எடுத்துள்ள முடிவு அவர்கள் சூழ்நிலையை மனதில் வைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கின்ற எந்த நடவடிக்கையையும் மீறி அதிமுகவால் எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலும் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள். இந்த முடிவை எடுக்க வேண்டிய ஒரு சூழலில் இருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: Government School Student: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி
மேலும் வருகிற 2026ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அதிமுக சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்கலாமே தவிர அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேர்தலை சந்திக்க இருக்கும் சூழலில் நிச்சயமாக இதைவிட பெரிய வெற்றியாக தான் இருக்கும். இந்த இரண்டு ஆண்டுகளில் முதல்வர் செய்யக்கூடிய பணிகள் அந்த வெற்றிக்கு இன்னும் கூடுதல் பலத்தை கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.