பி.இ., பி.டெக்., முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடக்கம்..? செமஸ்டர் தேர்வு தேதி..? அண்ணா பல்கலை. அறிவிப்பு

Published : Nov 04, 2022, 01:23 PM IST
பி.இ., பி.டெக்., முதலாமாண்டு வகுப்புகள் எப்போது தொடக்கம்..? செமஸ்டர் தேர்வு தேதி..? அண்ணா பல்கலை. அறிவிப்பு

சுருக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 3 சுற்றுகள் முடிந்துள்ளன. இதன் முடிவில் மொத்தம் 58 ஆயிரத்து 307 இடங்கள் நிரம்பியுள்ளன.

மேலும் படிக்க:பொறியியல் கலந்தாய்வு திடீரென ஒத்திவைப்பு.! என்ன காரணம் தெரியுமா.? மீண்டும் எப்போது கவுன்சிலிங்..?

இந்நிலையில் இறுதி சுற்று கலந்தாய்வு கடந்த 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 61,771 மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பொதுப்பிரிவில் 39 ஆயிரத்து 350 பேருக்கும் அரசு பள்ளி மாணவர்களில் 4 ஆயிரத்து 563 பேருக்கும் கல்லூரிகள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க:பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்.. எப்போது வரை நடைபெறுகிறது..? ஆன்லைனில் மேற்கொள்ளுவது எப்படி..? விவரம் இதோ

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான பி.இ மற்றும் பி.டெக் முதலாமாண்டு மாணவர்களின் வகுப்புகள் வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  மேலும் மாணவர்களுக்கு அறிமுக வகுப்புகளை வரும் 14 ஆம் தேதி தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டும் மார்ச் மாத இறுதியில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!