மதுரை ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து.. பற்றி எரியும் பெட்டிகள் - இருவர் உயிரிழந்ததாக தகவல்! Video!

By Ansgar R  |  First Published Aug 26, 2023, 6:57 AM IST

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


தற்போது இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும். மேலும் இருவர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் லக்னோ ராமேஸ்வரம் இடையிலான சுற்றுலா ரயிலில் இந்த தீ விபத்து ஏற்பள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. இன்று காலை சுமார் 5.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது என்றும், ரயிலின் உணவு தயாரிக்கும் பெட்டியில் இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

 

நத்தத்தில் இருசக்கர வாகனங்கள் மோதி கோர விபத்து; பெண் பலி, 2 பேர் படுகாயம்

சமையலறையில் உள்ள சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தற்பொழுது தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இந்த விபத்தில் இருவர் பலியானதாக கருதப்படும் நிலையில் மேலும் இருவர் இறந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

IRCTC இயக்கும் அந்த சுற்றுலா ரயிலில், பயணிகள் யாரும் இல்லாத நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளதாகவும், ஆகையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் மட்டும் இன்று 5 மணிநேரம் கரண்ட் இருக்காது..!

click me!