சென்னையில் தொடரும் தீ விபத்து… வளசரவாக்கத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

Asianet News Tamil  
Published : Jul 06, 2017, 10:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
சென்னையில் தொடரும் தீ விபத்து… வளசரவாக்கத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…

சுருக்கம்

fire accident in chennai

சென்னை வளசரவாக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள், பான் மசாலா பொருட்கள் எரிந்து நாசமாயின. மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

சென்னை வளரசவாக்கம் சாலையில் இயங்கி  வந்த பேன்சி ஸ்டோர் துணிகடை மற்றும் செருப்புக் கடை யில்  நேற்றிரவு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது.

இது குறித்து தீயணைப்புதுறையினர்க்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்த கோயம்பேடு ,மதுரவாயில் கீழ்பாக்கம் 

விருகம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் 2 மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து  ஏற்பட்டதாகவும்  இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை எனவும்  தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

உள்ளே வரும் முக்கிய கட்சி..! தென் தமிழகத்தில் சறுக்கல்... காத்திருந்து ஏமாந்த திமுக..!
விஜயகாந்துக்கு 'பாரத ரத்னா' வழங்கணும்.. தேமுதிக தீர்மானம்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!