கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லை எனில் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா? தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்..

By Ramya sFirst Published Feb 8, 2024, 7:35 AM IST
Highlights

கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

தமிழகத்தில் மொத்தம் 2.20 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டை தாரர்கள் என வெவ்வேறு பிரிவுகளில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றனர். நியாயவிலைக் கடைகளில் குளறுபடிகளை தவிர்க்கவும், கடைப் பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேரவும் பயோமெட்ரிக் கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

இந்த சூழலில் ரேஷன் அட்டையில் உள்ள பெயர்களை உறுதி செய்யும் நடைமுறை சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. அதன்படி ரேஷன் அட்டையில் பெயர் இருப்பவர்கள் அனைவரும் நியாயவிலை கடைகளுக்கு வந்து விரல் ரேகையை பதிவு செய்து பெயர் இருப்பதை உறுதி செய்யவும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டது. 

Latest Videos

School Teachers: 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.. என்ன காரணம் தெரியுமா?

இந்த நிலையில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் அந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பல நியாய விலைக்கடைகளில் விரல் ரேகையை பதிவு செய்யாவிட்டால், இந்த மாத இறுதிக்குள் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும் எண்று எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தமிழக அரசு இதுகுறித்து விளக்கம்  அளித்துள்ள தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ பிப்ரவரி 6, 7 ஆகிய தேதிகளில் வெளியான சில நாளேடுகளில் நியாயவிலைக் கடைகளில் இன்றியமையா பண்டங்கள் வாங்கும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் சுயவிவரங்களை வெள்ளைத்தாளில் அளிப்பதுடன், விரல் ரேகை சரிபார்ப்பை இம்மாத இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்களின் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் என்றும் இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் படி, பொது விநியோக திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்க மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 

அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்களை வாங்க நியாய விலை கடைக்கு வரும் போது கைவிரல் ரேகைப்பதிவு மூலம் புதுப்பிக்க கூறப்பட்டு அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப்பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக்கொள்ளலாம். அவ்வாறு செய்ய முடியவில்லை எனில் இதற்கான தனி முகாம்கள் நடத்தவும், தேவைப்பட்டால் வீட்டிற்கே சென்று புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Power Shutdown in Chennai: அட கடவுளே! இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? இதோ லிஸ்ட்

சில நாளிதழ்களில் குறிப்பிட்டிருப்பது போல் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்பட மாட்டாது. கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப்படாது. வெள்ளைத்தாளில் சுய விவரங்களை எழுதி தரவேண்டியதுமில்லை. எனவே இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!