பூமிக்கடியில் ஒரு அணை.. வியக்கவைக்கும் நெல்லை அதிசய கிணறு - உருவானது எப்படி தெரியுமா?

By Raghupati RFirst Published Aug 9, 2022, 3:06 PM IST
Highlights

இந்த கிணற்றிற்கு செல்லும் தண்ணீரால் சுமார் 20 கிமீ சுற்றளவுக்கு உள்ள கிணறு மற்றும் போர்வெல்லில் நீர்மட்டம் உயர்வதாக நம்பப்படுகிறது. 

நெல்லை மாவட்டம், ஆயன்குளத்தில் தட்சணமாற நாடார் சங்க செயலாளர் சண்முகவேல் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் நிரம்பவில்லை என்று கூறப்பட்டது.இந்த கிணற்றிற்கு செல்லும் தண்ணீரால் சுமார் 20 கிமீ சுற்றளவுக்கு உள்ள கிணறு மற்றும் போர்வெல்லில் நீர்மட்டம் உயர்வதாக நம்பப்படுகிறது. 

மேலும் கடற்கரையோரம் உள்ள ஊர்களின் கிணறுகளின் உப்பு தண்ணீர் நல்ல தண்ணீராக மாறுவதாகவும் கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி விவசாயிகள் இந்த அதிசய கிணற்றிற்குள் தண்ணீர் விட வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தமிழக சபாநாயகர் அப்பாவு, நெல்லை கலெக்டர் விஷ்ணு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து ஆய்வு செய்ய அரசுக்கு பரிந்துரைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

அதன்பேரில் நேற்று சென்னை ஐஐடி பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர் கொண்ட குழுவினரும் சேர்ந்து அதிசய கிணற்றை சுற்றி சுமார் 3 கிமீ சுற்றளவில் உள்ள கிணறுகளை செயற்கைகோள் படங்கள் மூலம் ஆய்வு செய்தனர்.  ஐஐடி குழுவினர் அதிசய கிணறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50 க்கும் கிணறுகளில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் கேமராக்கள் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கிணறுகள், சுண்ணாம்பு பாறைகளை கொண்டுள்ளதாகவும், மழை நீரில் உள்ள ஆக்சிஜன் சுண்ணாம்பு பாறைகளில் வேதிவினை புரிந்து துவாரங்களை உருவாக்குவதாகவும் பேராசிரியர்கள் கூறுகின்றனர். துவாரங்கள் நாளடைவில் பெரிய குகைகளாக மாறுவதாகவும் கூறப்படுகிறது. பேராசிரியர் குழுவுடன் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோரும் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் தற்போதைய ஆய்வு சராசரியாக 50 முதல் 60 கன அடி தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டதாக இந்த அதிசய கிணறு இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..“ஆட்சிக்கு வந்து 15 மாசம் ஆச்சு.. ஒன்னும் செய்யல !” - திமுகவை டாராக கிழித்த அண்ணாமலை !

மழைக்காலங்களில் வீணாகும் நீர், கிணறு வழியாக செல்லும் போது 6 கிலோமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் எனவும் தெரியவந்துள்ளது. ஐஐடி பேராசிரியர்கள் குழுவைச் சேர்ந்த பொறியாளர் வெங்கட்ராமன் சீனிவாசன் இதுபற்றி பேசிய போது, ‘கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் இந்த கிணறு குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டோம். 300 கிணறுகள் வரை சர்வே செய்தோம். 160 கிணறுகள் வரை அதன் நீர் மற்றும் கிணற்றின் தரைப்பகுதியில் இருக்கும் மண் எடுத்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். 

ஆராய்ச்சிக்காக நீர் மூழ்கி கேமராவை பயன்படுத்தி சுண்ணாம்பு பாறைகளில் உள்ள துளைகளின் அளவுகளை படம் பிடித்துக் கொண்டோம். ஆயன்குளம்  கிணறு உண்மையில் ஒரு அதிசய கிணறுதான் என்பது தெரியவந்துள்ளது. இந்த கிணற்றில் கீழ் உள்ள பாதாள குகைகள் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது. 

இந்த அதிசய கிணறு மூலமாக சுற்றிலும் ஆறு கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள கிணறுகளில்  நீர்மட்டம் உயர்கிறது. இதே போன்ற கிணறுகள் அருகிலுள்ள கிராமங்களில் உள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், சாத்தான்குளம் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வரை இதே போன்ற கிணறுகளை ஆய்வு செய்துள்ளோம்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

click me!