முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 135அடியை தாண்டியுள்ளது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியுள்ளதாகவும், இதனால் அணையில் நீர்வரத்தை விட, நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் படிப்படியாக நீரை வெளியேற்றி முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பினராயி விஜயன் கேட்டு கொண்டிருந்தார்.
உஷார் மக்களே !! தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை.. இன்று 8 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..
அணை பாதுகாப்பாக உள்ளது-ஸ்டாலின்
இதற்க்கு பதில் அளிக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். "முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அந்த அணையிலிருந்து விதிகளின்படி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்" என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கடந்த 4 ஆம் தேதி 136 அடியை முல்லை பெரியாறு அணை எட்டியதாகவும், இதனையடுத்து தண்ணீர் திறப்பு தொடர்பாக கேரள மாநில அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி 138.85 அடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 6 ஆயிரத்து 942 கன அடி அளவிற்கு நீரின் வரத்து உள்ளதாகவும், 5ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முல்லை பெரியார் அணைக்கும் வரும் நீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
இலங்கை அதிபருக்கு ஏற்பட்ட நிலை தான் திமுவிற்கும் ஏற்படும்...! ஸ்டாலினை சீண்டிய எடப்பாடி பழனிசாமி