மறைந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.13 லட்சம் நிதி திரட்டி கொடுத்த சக காவலர்கள்.. திருச்சியில் நெகிழ்ச்சி..

By Thanalakshmi VFirst Published Oct 17, 2022, 5:40 PM IST
Highlights

திருச்சி மாநகர காவல்துறையில்‌ பணிபுரிந்து மறைந்த பெண்‌ தலைமைகாவலர்‌ சுமதி என்பவருடன்‌ பயிற்சி பெற்ற காவலர்கள்‌ ஒன்றிணைந்து ரூ.13 லட்சம்‌ குடும்ப நல நிதியை அவரது குடும்பத்தினருக்கு திருச்சி மாநகர காவல்‌ ஆணையர்‌ இன்றூ வழங்கினார். 
 

திருச்சி மாநகரம்‌ கே.கே.நகர்‌ குற்றப்பிரிவு காவல்‌ நிலையத்தில் கடந்த 25 ஆண்டுகளாக‌ பணியாற்றி வந்த தலைமை காவலர் சுமதி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால்‌ பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி உயிரிழந்தார். 

இவருக்கு ஹரிஷ்‌ வயது 19 என்ற மகனும்‌ வர்ஷா வயது 16 என்ற மகளும்‌ உள்ளனர். இந்நிலையில் இவருடன் கடந்த 1997 ஆண்டு
காவல்துறை சேர்ந்து பணியாற்றி கொண்டிருக்கும்‌ சுமார்‌ 2572 காவலர்கள்‌ ஒன்றுசேர்ந்து , அவரது குடும்பத்தினருக்கு ரூ.13,02,500 நிதியை திரட்டி வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க:மாணவி சத்தியா தயாரிடம் ஒன்னரை மணி நேரம் துருவித் துருவி விசாரணை.. ரயில் ஓட்டுநரிடம் விசாரிக்க CBCID திட்டம்

இன்று திருச்சி மாநகர காவல்‌ ஆணையர்‌ அலுவலக கூட்ட அரங்கில்‌ நடந்த நிதியளிப்பு நிகழ்ச்சியில்‌ கலந்துக்கொண்ட காவல் ஆணையர் கார்த்திக்கேயன் இந்த நிதியினை அவர் குடும்பத்தினருக்கு வழங்கினார். அதன்படி ரூ.7 லட்சம் ரூபாயை மகள்‌ வர்ஷா பெயரிலும் மகன்‌ ஹரிஷ்‌ பெயரில்‌ 3லட்சம் ரூபாயம் நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தியும்‌, மீதம்‌ உள்ள ரூ.3,02,500 தொகைய ரொக்கமாக கணவர்‌ நாகரெத்தினத்திடம்‌ வழங்கப்பட்டது. 

மேலும் படிக்க:மக்களே அலர்ட் !!! நாளை இந்த பகுதிகளில் ரயில் சேவைகளில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..
 

click me!