
பேன்சி எண்:
சமீப காலமாக வாகனங்களுக்கான பேன்சி எண் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் நியூமராலஜி மற்றும் பிற காரணங்களுக்காக வாகனங்களுக்கு பேன்சி எண் வாங்கி வருகிறார்கள்.
அதிகரிக்கும் கட்டணம்:
ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செலுத்துகின்றனர். தமிழக அரசு 0001 முதல் 9999 வரையிலான 100 வாகன எண்களை சிறப்பு எண்களாக ஒதுக்கி உள்ளது. இந்த பேன்சி எண்களை ஆர்.டி.ஓக்கள் மூலம் பெற முடியாது. ஆனால் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை சிறப்புக் கட்டணமாக செலுத்தி பெறலாம்.
இதையும் படிங்க..பாஜக தலையீடு தவறானது.. பாஜகவை பொளந்து கட்டிய கே.பி முனுசாமி! அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு
8 லட்சம் வரை:
இந்நிலையில், டி.என் மோட்டார் வாகன விதிகள் 1989-ன் வரைவு திருத்தத்தின்படி பேன்சி எண் கட்டணத்தை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை உயர்த்த உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனால் விரைவில் பேன்சி எண்களுக்கான கட்டணம் இரு மடங்கு உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.
முதல் 4 தொடர்களுக்கு பேன்சி நம்பராக பெற விரும்புபவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் செலுத்தி இருந்தால் இனி மேல் ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டியதிருக்கும். 5 முதல் 8 வரையிலான தொடர்களுக்கு கட்டணம் ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.1.2 லட்சம் ஆகவும், 9 முதல் 10 வரை எண்களுக்கு கட்டணம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்கிறது. 11 முதல் 12 வரையிலான தொடர்களுக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகிறது.
இதையும் படிங்க..Google Diwali 2022: தீபாவளிக்கு கூகுள் கொடுத்த அசத்தல் ‘சர்ப்ரைஸ்’! மறக்காம இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!