பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்! தமிழ்நாட்டுக்கு மீண்டும் அல்வா!

Published : Feb 19, 2025, 12:22 PM ISTUpdated : Feb 19, 2025, 01:03 PM IST
பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்! தமிழ்நாட்டுக்கு மீண்டும் அல்வா!

சுருக்கம்

ஃபெஞ்சல் புயலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ரூ.37,000 கோடி நிவாரணம் கோரிய நிலையில், மத்திய அரசு ஆந்திரா, நாகாலாந்து உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. நவம்பர் 30ம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெளுத்து வாங்கிய பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. 

அதாவது பல்வேறு மாவட்டங்களில் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்டவை நிரம்பி உபரி நீர் வெளியேற்றதை அடுத்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள், பாலங்கள் கடும் சேதமடைந்துள்ளன. ஆடு, மாடுகள், வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைந்தன.  பல கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தலைகீழாக புரட்டி போட்டது. 

இதையும் படிங்க: பொதுமக்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! வங்கி கணக்கில் இன்னும் ஓரிரு நாளில்! முதல்வர் சொன்ன குட்நியூஸ்!

மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.37 ஆயிரம் கோடி நிவாரண நிதியாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆறு மாநிலங்களுக்கு ரூ.1,554.99 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது 2024ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றிற்காக உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து, ஒடிசா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு ரூ.1554.99 கோடி கூடுதல் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.80 கோடி நிதி விடுக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால். ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக ரூ.37 ஆயிரம் கோடி  நிதி வழங்க கோரிக்கை வைத்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

இதையும் படிங்க: பெண்களை அச்சுறுத்த நினைத்து இபிஎஸ் முன்னெடுத்த விஷமப் பிரச்சாரம்! பிசுபிசுத்துபோனது! இறங்கி அடிக்கும் ரகுபதி!

ஏற்கெனவே கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என தமிழக அரசு குற்றசாட்டு வைத்து வரும் நிலையில் தற்போது பேரிடர் நிதியும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!